உள்நாடுகல்வி

அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) –  அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இனி , அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் பங்களிப்புடன் 10 பேர் கொண்ட உபகுழு நியமிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான செயற்பாட்டின் போது அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் புதிய கல்விக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

நாங்கள்கோவிலுக்கு செல்வோம் தமிழர்களின் வாக்குகள் குறித்து கவலை இல்லை – நாமல்.

ரயில் சேவையில் எவ்வித பாதிப்புக்களும் இல்லை