உலகம்

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

(UTV | கொழும்பு) – இன்று அதிகாலை இந்தோனேசியாவில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இன்று அதிகாலை இந்தோனேசியாவில்  இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . அந்நாட்டின் கெபுலாவான் பதுவிலேயே இந்த நிலா நடுக்கம் உரப்பட்டதாக சொல்லப்படுகிறது

இது ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2 வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இங்கிலாந்திலும் அவசர நிலை பிரகடனம்

செல்லப் பிராணி நாய்க்கு MonkeyPox

கொரோனா தொற்றினால் 84 இலட்சம் பேர் பாதிப்பு