உள்நாடு

இலங்கை தாதியருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை தாதியருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு

இலங்கையர்கள் 15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையே 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாதியர் சேவைக்கான 51 ஆவது குழுவாக இந்த 15 இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 302 இலங்கையர்கள் தாதியர் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, இந்த வேலைவாய்ப்பானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும் எனவும், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வௌிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று – சபையில் ஆரம்பம்.

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

கண்டியில் மின்சார ரயில் பாதை