உள்நாடு

இன்றைய வெப்பச்சுட்டெண்

(UTV | கொழும்பு) –  இன்றைய வெப்பச்சுட்டெண்

இலங்கையின் வெப்பச்சுட்டெண் தொடர்பில் இன்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிரதேசங்களில் வெப்பநிலை 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சாதாரண வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே பொதுமக்கள், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“முஸ்லிம்களின், சட்டவிரோத காணிகள் அடைப்பை நிறுத்திய ஆளுநருக்கு நன்றிகள்”சாணக்கியன்

நிதிச் செயலாளருக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!

பலாங்கொடையில் முற்றாக தீக்கிரையாகிய வீடு!