உள்நாடு

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்கள் கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களான பெண்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டாளர் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி

“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!