உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..

(UTV | கொழும்பு) –  பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..

இந்த பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸார், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்காக, பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும்போது, அவதானத்துடன் செல்ல வேண்டும். மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்ப்பதுடன், வீதி விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தம்புள்ளை லென் விஹாரை (video)