உள்நாடுசூடான செய்திகள் 1

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

(UTV | கொழும்பு) –

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?”
முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

2023ஆம் ஆண்டுக்கான சவூதி அரசாங்கத்தினால் சவூதி தூதுவராலயத்தின் மூலம் எமது நாட்டிற்கு 50 மெற்றிக் தொன்கள் பேரீச்சம் பழம் கிடைத்ததாக முஸ்லிம் கலச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் தெரிவித்துள்ளார் .

அண்மைக்கலமாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதில் வழங்கும் முகமாக அவர் பதில் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கலச்சார திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் 50 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களே சவூதி அரசாங்கத்தின் மூலம் இலங்கையிலுள்ள சவூதி தூதுவராலயத்திற்கு கிடைத்துள்ளதாகவும் கௌரவ ஜனாதிபதி அவர்களின் வர்த்தமானி அறிவித்தலின் படி 1 KG இற்கு 1 ரூபா வீதம் சுங்க வரி செலுத்தி சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு அனுமதி பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளரின் அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அவ்வனுமதிக்கேற்ப சவூதி தூதுவராலயம் சுங்கத்திலிருந்து விடுவித்து எமது திணைக்களத்திற்கு 30 தொன்களை வழங்கியது. எமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 30 தொன் பேரீச்சம்பழங்களில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு மட்டுமே வழங்கப் போதுமானதாகக் காணப்பட்டது. எமது திணைக்களத்தில் 2,459 பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு பள்ளிவாசலுக்கு 14 கிலோகிராம் அடிப்படையில் 2,264 பள்ளிவாசல்களுக்கு 31,696 KGS பேரீத்தம் பழங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. சில நிறுவனங்களும் பள்ளிகளும் தமக்கு நன்கொடையாக கிடைக்கப் பெற்ற பேரீத்தம் பழங்களை அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு (195) கொடுப்பதாக எமது திணைக்களத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அக் குறித்த பள்ளிகளுக்கு எமது திணைக்களத்தினால் பேரீத்தம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் குறித்த நிறுவனங்களின் மூலம் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அத்தோடு சவூதி தூதுவராலயத்தினால் வழங்கப்பட்ட 30 தொன் இற்கு மேலதிகமாக 1,696 மபள பேரீத்தம்பழங்கள் தேவைப்பட்டதனால் அவற்றை திணைக்களம் தனியார் நலன்புரி நிறுவனங்களின் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.

மேலும் 2023.04.10 ஆம் திகதி சவூதி தூதுவராலயத்தின் மூலம் மேலும் 6 தொன்களை எமது திணைக்களத்திற்கு வழங்கினார்கள். நோன்பு காலத்தின் இறுதிப் பகுதி என்பதனாலும் கிடைக்கப்பெற்ற அளவு குறைவு என்பதனாலும் அவற்றை கொழும்பு மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்படாத மற்றும் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எமது திணைக்களத்தினால் பேரீத்தம் பழம் வழங்கப்பட்ட பள்ளிவாசல்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

இது வரை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு மேற்கூறிய தகவல்களுக்கு அமைய பேரீத்தம்பழம் கிடைக்கப்பெறாது இருப்பின் உடனடியாக திணைக்களத்தின் 0112667909 இலக்கத் தொலைபேசி ஊடாக திரு கே.ஏ.சப்ரி அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுக் கொள்கிறேன்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.