உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க திறமையான தலைவர் – அலி சப்ரி

(UTV | கொழும்பு) –  ரணில் விக்கிரமசிங்க திறமையான தலைவர் – அலி சப்ரி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான திறமையான தலைவர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சப்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது இதுவே முதல் தடவை எனவும், தான் முன்னர் எதிர் அணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் கைகோர்ப்பீர்களா என அமைச்சர் அலி சப்ரியிடம் வினவிய போது, ​​ஒரு அரசியல் கட்சியை மற்றொன்றிற்காக கைவிடும் வகை தாம் இல்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் தலைவராகத் தகுதியுடைய வேறு எவரையும் காண முடியாது.

தாம் முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான எதிர் அணியில் செயற்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் அவர் மீது தவறான அபிப்பிராயம் இருந்தமை தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு