(UTV | கொழும்பு) – “20ற்கு கை உயர்த்தி, மஹிந்த அணியுடன் இருந்ததால் பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட்டது” -ஹாபீஸ் நசீர் அகமட்
20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக நான் கை உயர்த்தியது உங்களுக்கு பிழையான நடவடிக்கையாக தெரியலாம். அவ்வாறு கை உயர்த்தாமல் விட்டிருந்தால் பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும்” என்று அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“வெளியில் இருந்து பார்ப்பதற்கு உங்களுக்கு பிழையான விடயங்களாக தெரிந்திருக்கலாம்.
உள்ளுக்கு என்ன நடந்த என்று எங்களுக்குத்தான் தெரியும்.
நாங்கள் 20க்கு கை உயர்த்தாமல் விட்டிருந்தால் பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும். பள்ளிவாயல்கள் வணக்கஸ்தளங்கள் தொடர்பிலான சட்டங்களும் வந்திருக்கும்.
20வது திருத்த சட்ட மூலத்துக்கு நாங்கள் கை உயர்த்தி ஆதரவு கொடுத்து 151 வரவில்லை. 151 வந்ததன் பின்னர் தான் நாங்கள் கையை உயர்த்தினோம்.
“பிச்சை வானா நாயைப் பிடி” என்ற சீலம் தான் வந்திருக்கும். நாங்கள் ஆதரவு கொடுக்காமலேயே ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு கொடுக்க இருந்தார்கள்.
151 என்ற அந்த ஆதரவையும் தாண்டியே அந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுக்க தயராக இருந்தார்கள்.
எங்களது பெயர் எத்தனையாவதாக இருகிறது என்று பாராளுமன்ற ஹன்சாட்டை எடுத்துப் பார்த்தால் தெரியும்.
சிறுபிள்ளையொன்றை எரித்த சம்பவத்தையும் என்னுடைய புகைப்படத்தையும் போட்டு சமூக ஊடகம ொன்றில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அறிந்தேன்.
கொரோனா ஜனாசா எரிப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முதலாவது ஜனாசா எரிக்கப்பட்டது, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியாகும். நான் எம்.பியாக வந்ததது. 2020ம் ஆண்டு ஓகஸ்ட் 8ஆம் திகதியாகும். ஜனாசா எரித்தமைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இனியாவது நாங்கள அவதானமாக இருக்க வேண்டும்.
பள்ளிவாசலாக இருந்தாலும் இந்து கோவில்களாக இருந்தாலும் பதிவு செய்வதை பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්