உள்நாடு

2000 முட்டைகள் பறிமுதல்

(UTV | கொழும்பு) –  2000 முட்டைகள் பறிமுதல்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுவரெலியா மாவட்டத்தின் பல முக்கிய நகரங்களில், அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 20 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் நுவரெலியா மாவட்ட அதிகாரி அமில ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, ராகலை, கினிகத்ஹேன, ஹப்புகஸ்தலாவ, வட்டவளை போன்ற பிரதேசங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 10 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபிற்படுத்தப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹட்டன் மற்றும் நுவரெலியா நீதவான் நீதிமன்றங்களில், சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் 5,30,000 ரூபா தண்டப்பணமாக வசூலிக்க முடிந்ததாக அமில ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் , நுவரெலியா நகரில் முட்டைகளை வைத்திருந்தும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யாத வியாபாரி ஒருவரிடமிருந்து 2000 முட்டைகளை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளதாகவும், பண்டிகை காலம் முடியும் வரை இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமில ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் செய்திகள் சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும்

ரணில் – சஜித் இடையே சந்திப்பு

குழந்தை வளர்ப்பு குறித்து விசேட வகுப்பு – சுகாதார அமைச்சு.