உள்நாடு

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி

(UTV | கொழும்பு) –  கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி

புலஸ்திகம பிரதேசத்தில் மனைவியொருவர் தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரும் அவரது மனைவியும் நேற்று மதியம் முதல் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்துள்ளனர்.

விசாரணையில் மனைவி கணவனை பின்னால் கத்தியால் குத்தியிருப்பது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேக நபரான மனைவியும் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டாபயவினதும் ரணிலினதும் வழியிலயே இன்று ஜனாதிபதி அநுரவும் பயணிக்கிறார் – சஜித்

editor

துறைமுக நகர மனுக்கள் : நான்காவது நாளாக இன்றும் விசாரணைக்கு

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்