(UTV | கொழும்பு) – முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் அறிவிப்பதற்கு அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எண் 24 மணி நேரமும் செயற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தரமற்ற எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 011 218 22 53 ஊடாக பொதுமக்கள் தெரிவிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්