(UTV | கொழும்பு) – புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தவேகத்தில் நிலைமை சென்றால் நாங்கள் இன்று சுதந்திரமாக கருத்துதெரிவிப்பது பேசுவது போன்று எதிர்காலத்தில் பேச முடியாத நிலையேற்படும், என தெரிவித்துள்ள முன்னாள்ஜனாதிபதி ஜனநாயகம் என்பதற்கு இடமிருக்காது நாங்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அரகலய இலங்கைக்கு மிக முக்கியமான பாடமொன்றை கற்றுத்தந்தது, மக்கள் ஐக்கியப்பட்டு உறுதியாக மாற்றத்தை கோரினால் மாற்றம் சாத்தியமாகும் என்பதே அது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே அரகலய மூலமாகவோ அல்லது புரட்சி மூலமோ எதனையாவது செய்யவேண்டும் எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්