விளையாட்டு

பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தி பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறியது ரைசிங் புனே

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55 ஆவது போட்டியில் ரைசிங் புனே சூப்பர்கியன்ட் அணியும் கிங்ஸ்லென் பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் ரைசிங் புனே சூப்பர்கியன்ட் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ்லென் பஞ்சாப் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய ரைசிங் புனே சூப்பர்கியன்ட் அணி 12 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியுடன் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறிய ரைசிங் புனே சூப்பர்கியன்ட் அணி, புள்ளி பட்டியில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த தொடரின் 56 ஆவது போட்டியில் பெங்களுர் ரொயல் செலஞ்சர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில ரொயல் செலஞ்சர்ஸ் மற்றும் டெல்லிடெயார் டெவில்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பாடிய பெங்களுர் ரொயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 161 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய 20 டெல்லிடெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

[ot-video][/ot-video]

 

Related posts

வீழ்ந்தது நியூசிலாந்து, கிண்ணம் ஆஸிக்கு

புதிய ஆடம்பரக் காரை வாங்கிய விராட் கோலி [VIDEO]

குசல் மெண்டிஸ் தனது 06 வது சத்தைப் பதிவு செய்தார்