(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பித்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්