உள்நாடு

பண்டாவளை – பூனாகலை கபரகல மண்சரிவு

(UTV | பண்டாவளை) – பண்டாவளை – பூனாகலை கபரகல மண்சரிவு

பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளதாகவும் எவருக்கும் உயிர் சேதம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பண்டாரவளை பகுதியில் (19) நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.

கபரகல மண்சரிவு - சேத விபரங்கள் வௌியானது!

காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும்

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பபட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது .

இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதாவுல்லாஹ்வின் கட்சிக்குள் குழப்பம்? பதவி விலகிய மகன் ஸகி

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை

தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு

editor