(UTV | கொழும்பு) – கண்டி – மஹியங்கனை பிரதான வீதி பயன்படுத்தவிருக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18ஆம் வளைவில் பாறைகள் விழும் அபாயம் உள்ள இடத்தை கண்காணிப்பதற்காக கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் குழுவொன்று இன்று (20) அந்த இடத்திற்கு சென்றுள்ளது.
நேற்று மதியம் 18வது வளைவில் பாறைகள், மேடுகள் சரிந்து போக்குவரத்து தடைபட்டதுடன், மண்சரிவு பிரிவின் உச்சியில் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்படி கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தண்ணேகும்புர சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியில் பயணித்து ரஜ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக மஹியங்கனை நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ரஜமாவத்தை சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியூடாக பயணித்து தன்னேகும்புர சந்தியில் இடப்புறம் திரும்பி கண்டி நோக்கி செல்ல முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්