(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் – மருத்துவ இராஜாங்க அமைச்சர்
எதிர்பாத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் எனவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல. கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். இருப்பினும் ஏப்ரல் 25-ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெறும்,”
மேலும், “நாடு முழுவதும் சுமார் 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இது நாட்டுக்கு சுமை. ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன் தொடர தயார்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්