(UTV | கொழும்பு) – மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இரண்டு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்திற்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அலபாத, நிவித்திகல, கலவான மற்றும் எஹலியகொட பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (17) இரவு 7 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්