(UTV | நியூசிலாந்து) – நியூசிலாந்தில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் அவுஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று 7.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 300 கி.மீ சுற்றளவு கொண்ட மக்கள் வசிக்காத இந்த தீவுகளுக்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්