உள்நாடு

சிறுவர் இல்லத்தில் இருந்து 03 சிறுமிகள் மாயம்

(UTV | யாழ்ப்பாணம்) –  சிறுவர் இல்லத்தில் இருந்து 03 சிறுமிகள் மாயம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பிரதேசத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும்,
இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதுடன்,

சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாண், பனிஸ் விலைகள் குறையும் சாத்தியம்

யூசுப் முப்தி இமாம்களை விமர்சித்தாரா? உமர் யூசுப் பதில்

கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு மீண்டும் பத்தரமுல்லைக்கு