உள்நாடு

 ஏப்ரல் 25 தேர்தல் நடைபெறாது

(UTV | கொழும்பு) –  ஏப்ரல் 25 தேர்தல் நடைபெறாது

தற்போதைய நிலையில் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான Paffrel தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவைக் கூட கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், மக்கள் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு வெளியே தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த முயற்சித்தால் எதிர்மறையான விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்[பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை வருகிறார் எலான் மஸ்க்!

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வு இன்றேல் அமைதிப் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் தொடரும் [VIDEO]