உள்நாடு

கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 8,422 smart phones திருடப்பட்டுள்தாக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காக பொலிஸார் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிகழ்நிலை (ஒன்லைன்) முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் தமக்கு மொத்தமாக 134,451 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2019 ஆம் ஆண்டில், 40,167 கைபேசிகளும் 2020 ஆம் ஆண்டில் 12,567 கைபேசிகளும், 2021 ஆம் ஆண்டில் 27,933 பேசிகளும் திருடப்பட்டுள்ளன அல்லது தொலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன தொலைபேசிகள் குறித்து தமக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள், உரிய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் (பொது முறைப்பாடுகள்) மேனகா பத்திரன
ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமையும் குறிபிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிகமான போதை மாத்திரை அடங்கிய பொதியுடன் ஒருவர் கைது

மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரம் – அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவேண்டும் – சுமந்திரன்

editor

ஜூன் 21 வரையில் இத்தாலி செல்லத் தடை