உள்நாடு

பவித்ரா வன்னியாராச்சிக்கு புதிய பதவி

(UTV | கொழும்பு) –  பவித்ரா வன்னியாராச்சிக்கு புதிய பதவி

⚪ இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

⚪ 09ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம்,
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

⚪ விசேட விருந்தினராக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி மற்றும்,
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், ⚪ இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலப்பதி, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி