உள்நாடு

மீண்டும் வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

(UTV | கொழும்பு) –  மீண்டும் வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

நாட்டில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருவதாக அவதானிக்க முடிகின்றது .

அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

குறிப்பு ; தங்கத்தின் இன்றைய நிலவரம்

குறித்த தினத்தில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 152,700 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பம்

லிட்ரோ எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி