உள்நாடு

இலங்கையை வந்தடைந்தது சுற்றுலாக்கப்பல்

(UTV | கொழும்பு) –  இலங்கையை வந்தடைந்தது சுற்றுலாக்கப்பல்

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றி வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், கப்பல் இன்று இரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – யாரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.

editor

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதில் அவசரப்பட தேவையில்லை