உள்நாடு

 சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண் கைது

(UTV | கொழும்பு) –  சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண் கைது

சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமியின் வளர்ப்புத்தாய் எனவும், சிறுவனின் தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,

கைது செய்யப்பட்ட பெண் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தகுத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் -பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

இதுவரை 1917 பேர் குணமடைந்தனர்