உள்நாடு

 இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கத்தினர், சட்ட வல்லுனர்கள் மற்றும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் நபரொருவர் உயிரிழந்தமை மற்றும் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நபரொருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

editor

எனது சகோதரி மரணித்தது போன்ற வேதனையே இஷாலினியின் மரணத்திலும் எனக்குண்டு – ரிஷாத்