உள்நாடு

மனித உரிமைகள் அழைக்கப்பட்டுள்ளார் டிரான் அலஸ்

(UTV | கொழும்பு) –  மனித உரிமைகள் அழைக்கப்பட்டுள்ளார் டிரான் அலஸ்

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அமைச்சருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான போராட்டங்களை கட்டுப்படுத்த களப்பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அலி சாஹிர் மௌலானாவுக்கு கால அவகாசம் கொடுத்த ரவூப் ஹக்கீம்

editor

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு