உள்நாடு

ரமழான் மாதத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட உத்தரவு

(UTV | கொழும்பு) –    இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பு மாதத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

குறித்த காலத்தில் பேரீச்சம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் , நலன் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ பெறுவதற்கு வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்பண்டிகைக் காலம் மாத்திரமே இந்த வரி விலக்கு பொருந்தும் எனவும் ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


BE INFORMED WHEREVER YOU ARE

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி ரணில்

editor

பிணையில் செல்ல திலும் துஷித்தவுக்கு அனுமதி [UPDATE]

யாழில் இடம்பெற்ற களியாட்ட விருந்து எழுந்துள்ள சர்ச்சை!