உள்நாடு

கொழும்பிலும் நிலநடுக்கம் ஏற்படுமா?

(UTV | கொழும்பு) –  கொழும்பிலும் நிலநடுக்கம் ஏற்படுமா?

இந்தியாவின் வட பகுதியில் அல்லது ஹிமாலயாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆராய விசேட நிபுணர்கள் குழு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த 02 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் இமயமலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கொழும்பிலும் உணரப்பட்டது. இதனால், இந்தியாவின் வடபகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டால் 2 ஆயிரத்து 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இலங்கையிலும் நிலநடுக்கம் உணரப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைவாக, இன்று (27) குறித்த கலந்துரையாடல் மேட்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது