உள்நாடு

கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு விசேட சலுகை

(UTV | கொழும்பு) –  கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு விசேட சலுகை

கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த, நகர அபிவிருத்ததிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மேற்கொண்ட கள ஆய்வுப் பயணத்தின் பின்னரே இது இடம்பெற்ற்றுள்ளது

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

உட்காருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால், மரங்களின் கீழ், சுவர்களுக்கு மேல், வீதிகளில் அமர்ந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

டிப்பர் வாகன விபத்து – மற்றொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு