உள்நாடு

 மாணவியின்( காதலியின்) அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலன் கைது!

(UTV | கொழும்பு) –  மாணவியின்( காதலியின்) அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலன் கைது!

மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (22) தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை மாநகர சபை பெண் உறுப்பினர் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவிற்கு முறைப்பாடு ஒன்றினை வழங்கி இருந்தார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை மாணவியின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளனர்

குறித்த இளைஞன் பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து குறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன் அதனை காணொளியாக தனது கைத்தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.

பின்னர் 2 வருடங்களாக தொடர்ந்த காதல் பின்னர் இடைநடுவில் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த இளைஞன் விரக்தியுற்று மாணவியின் பெற்றொருக்கு பல்வேறு அழுத்தங்களை தொலைபேசி ஊடாக வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சமூக வலைத்தளங்களில் அம்மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருந்தன.

இதனை அடுத்து அம்மாணவியின் தாயார் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து நேற்று (23) கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 8 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழிநுட்ப பிரிவினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

டிசம்பரில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் தாக்குதல் சம்பவம் : பிணையில் விடுதலையான சபீஸ்