(UTV | கொழும்பு) – அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்
அதிகரித்த மின் கட்டணம் காரணமாக நீர் விநியோக செலவு 65 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வள சபையின் பொது முகாமையாளர் கலாநிதி வசந்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு குடிநீர்க் கட்டணத்தை உயர்த்திய பின்னர், 2022ஆம் ஆண்டு வரை மீண்டும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், நீர்வள சபை பல சிரமங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு உயர்தர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
நீர்வள சபைக்கு கிடைக்கும் வருமானம் போதாது எனவும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் அதனை எப்படியாவது சமாளித்து விட்டதாகவும் ஆனால் தற்போது இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும்
மேலும், 2022 செப்டம்பரில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எவ்வாறாயினும், குடிநீர் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆனால் எவ்வளவு, எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්