(UTV | கொழும்பு) – நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு
புத்தல – வெல்லவாய பகுதிகளில் நேற்றும் கடந்த சில தினங்களிலும் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளையும் அண்மைய நில அதிர்வுகளையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளதாக சுரங்கப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நில அதிர்வினால் ஏனைய நாடுகளையும் காட்டிலும் இலங்கைக்கு பாதிப்பு குறைவாகவே இருப்பதாவாகும், இருப்பினும், குறித்த பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்வென்பது குறித்த ஆய்வுகளை முன்னெடுக்கவுள்லதாவும்,
மேலும், அதனை ஏனைய நாடுகளிலும், எமது நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடனும் ஒப்பிட்டு, ஆய்வினை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්