(UTV | கொழும்பு) – 2022 ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் அரசாங்க மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில்
இன்று (20) ஆரம்பமாகின்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை காரணமாக கடந்த ஜனவரி 23ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை மார்ச் 24ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.
2023ஆம் கல்வியாண்டு மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, 2023 கல்வியாண்டு தொடர்பான பாடப்புத்தகங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්