(UTV | கொழும்பு) – 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
பஸ்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் ஹட்டன் நகரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பஸ் உட்பட இரு அரச பஸ்களும், தியகல கினிகத்தேனை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில், கினிக்கத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு கினிக்கத்தேனை பொலிஸார் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கினிக்கத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්