உள்நாடு

 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்

இதன்படி, 2020/2021 வருட மாணவர்கள் தவிர்ந்த வசிப்பிட வசதி செய்துள்ள அனைத்து பீடங்களின் மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020/2021 வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து பீடங்களின் மாணவர்கள் இன்று (16) மாலை 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தாக்கியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்