உள்நாடு

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு

(UTV | கொழும்பு) –    பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் துருக்கி மக்களுக்காக மௌன அஞ்சலி

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், துருக்கியை உலுக்கிய சமீபத்திய பேரழிவுகரமான நிலநடுக்கங்களை அடுத்து, துருக்கிய சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்பாக நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியில் ஏற்பட்ட பயங்கர அழிவுகள் மற்றும் பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் குறித்து உள்ளூர் சமூகத்துக்கு உணர்த்துவதற்காக நடத்தப்பட்டது.

புகைப்படங்கள், சில உண்மையான வீடியோ காட்சிகள் மற்றும் நிலநடுக்கத்தின் பின்விளைவுகளின் புள்ளிவிவரங்கள், போயன்றவை கலந்து கொண்டோருடன் பகிர்ந்துகொள்ளபட்டது.

துருக்கி மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இத்தகைய இதயப்பூர்வமான நிகழ்வை நடத்தியதற்காக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஆர்) உமர் பாரூக் புர்கி எச்ஐ (எம்) அவர்களுக்கு இலங்கைக்கான துருக்கி தூதுவர் திருமதி ரகிபே டெமெட் செகர்சியோக்லு, நன்றி தெரிவித்தார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழ் மாவட்டத்தில் குறைக்கப்படாத உணவுகளின் விலை – பொதுமக்கள் விசனம்

டைல்ஸ் இறக்குமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி

கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு