உலகம்ஒரு தேடல்

twitter நிறுவனத்தின் புதிய CEO

(UTV | ) –  twitter நிறுவனத்தின் புதிய CEO

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள எலான் மஸ்க், தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘டுவிட்டரின் புதிய சிஇஓ’ என பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்திய அவர், தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்தொடரும் 12.2 கோடி பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்.

வாக்கெடுப்பில் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறியிருந்தார்.

Image

அதன் முடிவில் அவர் பொறுப்பில் இருந்து விலகலாம் என 57.5 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

இதனையடுத்து எலான் மஸ்க், ‘சிஇஓ பதவிக்கு முட்டாள் ஒருவரை கண்டுபிடித்த பிறகு, விரைவில் தலைமை பதவியில் இருந்து விலகுவேன்’ என்றும், ‘மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழிநடத்த போகிறேன்’ எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டுவிட்டரில் தனது வளர்ப்பு நாய்யின் புகைப்படத்தை பகிர்ந்து, டுவிட்டரின் புதிய சிஇஓ என்றும், மற்றவர்களை விட இது சிறந்தது எனவும் பதிவிட்டுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகை – விமானங்களுக்கு எச்சரிக்கை

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி