உள்நாடு

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

(UTV | கொழும்பு) –    இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில்,

66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்தனர்.. இருந்தகளும் கூட தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்!

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

யூரியா உரத்தின் விலை குறைவு