உள்நாடு

ஒருவர் அடித்து கொலை- 16 வயதுடைய 03 சிறுவர்கள் கைது!

(UTV | அளுத்கம ) – ஒருவர் அடித்து கொலை- 16 வயதுடைய 03 சிறுவர்கள் கைது!

அளுத்கம – மத்துகம பிரதேசத்தின் கல்மந்த பகுதியில் நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வலகெதெர குருதிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் வீட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நேற்று மாலை தனது வீட்டை விட்டு வெளியேறி சந்தேக நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாக்குவாதம் பெய்தற்காகவே, சந்தேகநபர்கள் குறித்த நபரை தாக்கியுள்ளதாகவும் , இதன் பின்னர் காயமடைந்த நபர் சீனவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வெலிப்பென்ன பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் உறுதி

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

கட்சி உறுப்புரிமையில் இருந்து ரஞ்சன் தற்காலிகமாக இடைநீக்கம்