உள்நாடு

திரிபோசா வழங்குவதில் சிக்கல்

(UTV | கொழும்பு) – திரிபோசா வழங்குவதில் சிக்கல்

உள்நாட்டில் விளையும் சோளத்தில் அடங்கியுள்ள அஃப்லடொக்சின்(Aflatoxin) அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன, 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அஃப்லடொக்சின் அடங்கியுள்ள சோளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சோளச் செய்கையை கண்டறிவதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும், தற்போதுள்ள சதவீதங்களை மாற்றியமைப்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர் ஒருவர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் 42,496 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தம்

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை