உள்நாடு

 தேர்தல் தொடர்பில் நாளை விசேட பேச்சுவார்த்தை !

(UTV | கொழும்பு) –  தேர்தல் தொடர்பில் நாளை விசேட பேச்சுவார்த்தை !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கட்சி செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டதுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் 30 கோடி ரூபாவை திறைச்சேரியிடம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிறுவன மட்டத்தில் ஒருசில சவால்கள் தோற்றம் பெற்றுள்ளன.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒருசில சவால்கள் தோற்றம் பெற்றுள்ளன.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளின் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுடன் நாளை விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மேலும் 30 கோடி ரூபாவை திறைச்சேரியிடம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தியோகப்பூர்வ வலியுறுத்தல் கடிதம் இன்று அல்லது நாளை அனுப்பி வைக்கப்படும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

அரசிலிருந்து விலகிய SLFP உறுப்பினர்கள் விபரம்