உள்நாடு

காதலர் தினத்தில் கஞ்சா சொக்லட்?

(UTV | கொழும்பு) – காதலர் தினத்தில் கஞ்சா சொக்லட்?

எதிர் வரும் காதலர் தினத்திற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் கஞ்சா கலந்த சொக்லேட் வகைக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி நேற்று (12ம் திகதி) தெரிவித்துள்ளார்..

பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் இந்த சொக்லேட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும்,
காதலர்களுக்காக தயாரிக்கப்படும் இவ்வகை சொக்லேட்டில் கஞ்சா அஸ்வகந்தா, அதிமதுரம் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை சொக்லேட்டை சந்தையில் வெளியிடுவதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை
கஞ்சா போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இது தடைசெய்யப்பட்ட தயாரிப்பு எனவும்,
இந்நாட்டில் மருந்துகள் தயாரிப்பதற்கு மாத்திரமே கஞ்சா பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வகை சொக்லேட்டைத் தயாரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இந்த தயாரிப்புக்கான அனுமதியை பெற ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோரிக்கையின்படி, இந்த தயாரிப்பு இன்னும் ஆராய்ச்சி நிலையில் இருக்கும்போது, ​​ஒரு குறிப்பிட்ட பகுதியை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மூன்றாம் கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

1,0000 கஞ்சா கலந்த சொக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், அந்த 1,000 சொக்லேட்டுகளும் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமனை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்”

நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது – நிமல் லான்சா எம்.பி

editor