உள்நாடு

 பல்கலைகழக முரண்பாடுகளை தவிர்க்க சமரச பிரிவுகள்

(UTV | கொழும்பு) –  பல்கலைகழக முரண்பாடுகளை தவிர்க்க சமரச பிரிவுகள்

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முரண்பாடுகளைத் தீர்க்கும் சமரசப் பிரிவுகளை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மோதல் முகாமைத்துவம் மற்றும் சமாதானம் தொடர்பான பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

(UGC )பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் தொடர்புடைய நல்லிணக்க அலகுகள் நிறுவப்படவுள்ளதாகவும்,

“இந்த நாட்டிலுள்ள பதினேழு தேசிய பல்கலைக்கழகங்களும் பொருத்தமான நல்லிணக்க அலகுகளை நிறுவுகின்றன. இதன் மூலம் சமரசப் பிரிவுகளை அமைப்பது தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. 17 பல்கலைக்கழகங்களில், கொழும்பு, றுகுணு மற்றும் களனி பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே மோதல் முகாமைத்துவம் மற்றும் சமாதானம் பற்றிய பாடநெறியை நடத்தி வருகின்றன.

களனி பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க காரியாலயத்துக்கு பணிப்பாளர் பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி நல்லிணக்க வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி லமாஹேவா தெரிவித்வத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SLPP நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

யுகதனவி அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு