(UTV | கொழும்பு) – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- வசந்த முதலிகே
பல்கலைக்கழ மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
செயற்பாட்டாளர்களின் உரிமைகளை மீறியதற்காக அமைச்சரொருவர் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்களை தடுத்து வைக்க போலியான ஆதாரங்களை தயாரித்ததாக அந்த முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්