உள்நாடு

இன்று இந்தியாவினால் 50 பஸ்கள் வழங்கிவைப்பு

(UTV | கொழும்பு) – இன்று இந்தியாவினால் 50 பஸ்கள் வழங்கிவைப்பு 

சுதந்திரத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

 

அதன் முதல் தொகுதியாக 75 பேருந்துகள் அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பேருந்துகள் வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்

திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதிகளை தடை செய்ய மத்திய வங்கி பரிந்துரை

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்