உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்

12.5 Kg வீட்டு எரிவாயு சிலிண்டரின் (gas cylinder) விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ LITRO நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது அன்றைய தினம் நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் இடம்பெறும் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 Kg வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதே எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

நாட்டில் ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!