(UTV | கொழும்பு) – இன்றைய வானிலை (Weather Update)
மழை விபரம்….
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நேற்று இரவு திருகோணமலைக்கு கிழக்கே 180km தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை
மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து (01 ) இன்று காலை இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும்.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும்.
என வளிமண்டலவியல் திணைக்களமா தெரிவித்துள்ளது.
காற்றின் திசை …..
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஏனைய இடங்களில் மணிக்கு (40-50) கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
(இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.)
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්